ADVERTISEMENT
இயக்குனர் முதல் டாக்டர் வரை மொத்தம் 14 பேர்! பிரபல நடிகை பாலியல் புகார்
கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘பட்னாகர்’ என்ற மலையாள திரைப்படம் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை ரேவதி சம்பத். 27 வயதாகும் இவர் நடிகை, உளவியல் நிபுணர், சமூக ஆர்வலர் எனப் பன்முகம் கொண்டவர்.
இந்நிலையில் தற்போது இவர் தனக்கு பாலியல் தொல்லை தந்தவர்கள் என இயக்குனர்கள் முதல் மருத்துவர்கள் என 14 பேருடைய பட்டியலை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் “இவர்கள் என்னை பாலியல் ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்வு ரீதியாக துன்புறுத்தியவர்கள்” எனக் குறிப்பிட்டு சம்பந்தப்பட்ட அந்த 14 நபர்களின் பெயர்களை வரிசையாக பட்டியலிட்டுள்ளார். அவர்களின் பெயர்கள் பின்வருமாறு:
1) ராஜேஷ் தொச்சிவர் (இயக்குனர்)
2) சித்திக் (நடிகர்)
3) ஆஷிக் மஹி (புகைப்படக் கலைஞர்)
4) சிஜூ (நடிகர்)
5) அபில் தேவ் (கேரள பேஷன் லீக் நிறுவனர்)
6) அஜய் பிரபாகர் (டாக்டர்)
7) எம்.எஸ்.பாதுஷ் (துஷ்பிரயோகம் செய்தவர்)
8) சவுரப் கிருஷ்ணன் (இணையதளத்தில் கேலி செய்தவர் )
9) நந்து அசோகன் ( டி.ஒய்.எப்.ஐ யூனிட் கமிட்டி உறுப்பினர், நெடுங்கர்)
10) மேக்ஸ்வெல் ஜோஸ் (குறும்பட இயக்குனர்)
11) ஷானூப் கர்வத் மற்றும் சாக்கோஸ் கேக்குகள் (விளம்பர இயக்குனர்)
12) ராகேந்த் பை (காஸ்ட் மீ பெர்பெக்ட், காஸ்டிங் டைரக்டர்)
13) சாருன் லியோ (ஈஎஸ்ஏஎப் வங்கி ஏஜெண்ட், வலியத்துரா)
14) பினு (சப் இன்ஸ்பெக்டர், பூந்துரா போலீஸ் நிலையம், திருவனந்தபுரம்)
இந்நிலையில் நடிகை ரேவதி சம்பத் குற்றம்சாட்டியிருக்கும் இந்த நபர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு தரப்பும், விளம்பரத்திற்காக அவர் இப்படி செய்வதாக மற்றொரு தரப்பும் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். இயக்குனர்கள் முதல் டாக்டர் வரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வெளியான இந்த குற்றசாட்டு விவகாரம் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.