Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/livetamilnews.com/public_html/wp-includes/functions.php on line 6131

பொங்கலுக்கு தாண்டவம் ஆடவிருக்கும் ஈஸ்வரன்!

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் 46வது திரைப்படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். பாரதிராஜா, மனோஜ், சரவணன், முனீஸ்காந்த், யோகி உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இத்திரைப்படத்தை மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்து வருகிறது. இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக தமன், கலை இயக்குநராக ராஜீவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லை சுற்றியுள்ள பகுதியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தற்போது இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸடர் இன்று வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு ‘ஈஸ்வரன்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

https://youtu.be/wCKEIQTqcJ4

மேலும், இத்திரைப்படம் வரும் பொங்கலன்று திரையில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/SilambarasanTR_/status/1320615962110877696?s=20

கழுத்தில் பாம்போடு வலம்வரும் சிம்புவின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. உடல் எடையை முற்றிலும் குறைத்திருக்கும் சிம்புவின் புதிய தோற்றம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பொதுவாக சுசீந்திரன் திரைப்படம் என்றாலே அதில் விளையாட்டு இல்லாமல் இருக்காது. அதேபோல் இத்திரைப்படமும் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. கிராமத்து பின்னணியில் இருக்கும் இப்படம் சென்ட்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு வித்தியாசமான கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திரைப்படம் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகும் என சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/SilambarasanTR_/status/1320665579380879361?s=20

நீண்ட நாட்களாக காத்திருந்த சிம்புவின் ரசிகர்களுக்கு இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

Leave a Comment