பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு படையெடுக்கும் தமிழ் சினிமா பிரபலங்கள்!!
பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கடந்த மாதம் 27 ஆம் தேதி கோயில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பழனி முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிலையில் தமிழ் சினிமா பிரபலங்கள் இருக்கும் ஒரு சில நடிகர்கள் பழனி முருகனைக் காண அவ்வப்போது வந்தவண்ணம் உள்ளனர்.
கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற பிறகு நேற்று நடிகை சமந்தா தன் உடல்நிலை சரியாக வேண்டும் என்று இந்த கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து இன்று நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் அவரது மனைவி மஞ்சிமா மோகனுடன் சுவாமி தரிசனம் செய்வதற்காக பழனி வந்திருந்தார்.
அப்போது அவர்கள் இருவரும் கோவில் மலை அடிவாரத்திலிருந்து ரோப் கார் மூலம் மலை கோவிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்த பின்னர் கோவில் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட பிரசாதங்களை பெற்றுக்கொண்டு இருவரும் மலை மீது இருந்து கீழே இறங்கி புறப்பட்டனர்.