Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/livetamilnews.com/public_html/wp-includes/functions.php on line 6131

245 பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட டாக்டர்…20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு!!

245 பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட டாக்டர்…20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு!!

நியூயார்க்:

அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ராபர்ட் ஹேடன்(64). இவர் நியூயார்க்கில் மிகவும் பிரபலமான மருத்துவராக இருந்துள்ளார். இவரிடம் சிகிச்சை பெறுவதற்காக பல மாகாணங்களில் இருந்து மகளிர் இவரைத் தேடி வருவார்களாம்.மேலும் இவர் கடந்த 1980ம் ஆண்டிலிருந்து இருந்து,கொலம்பியா பல்கலைக்கழக இர்விங் மருத்துவ மையம், நியூயார்க்-பிரஸ்பைடிரியன் உள்ளிட்ட முக்கிய மருத்துவமனைகளில் பணியாற்றி உள்ளார்.

இவர் தன்னிடம் மருத்துவ பரிசோதனைக்கு வரும் பெண்களில் பலரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிகள் என எதையும் பற்றி சிந்திக்காமல் ஹேடன் அவர்களிடம் மிக கொடூரமாக நடந்து கொண்டுள்ளார்.

மேலும் இது குறித்த தகவல்கள் கடந்த 2012ம் ஆண்டு முதல் வெளிவரத் தொடங்கின. கடந்த 2017ம் ஆண்டு தாங்கள் ராபர்ட் ஹேடனால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளோம் என்று பெண்கள் பலர் இவர் மீது குற்றம் சாட்டினர்.மேலும் சிலர் போலீஸில் புகார் அளித்தனர்.அதனை தொடர்ந்து மருத்துவர் மீது கடந்த 2020ல் வழக்குகள் பதிவானது .

இவர் மீதான வழக்கு நீதிபதி ‘ரிச்சர்ட் எம்.பெர்மன்’ முன் விசாரணைக்கு வந்தது.பாதிக்கப்பட்டவர்களில் 9 பெண்கள் மட்டுமே சாட்சியம் அளித்த நிலையில் தற்பொழுது அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிந்தன. இதையடுத்து, மகப்பேறு மருத்துவர் ராபர்ட் ரிச்சர்ட் 20 ஆண்டு காலத்தில்  நூற்றுக்கணக்ககான பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதற்காக 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வித்துள்ளது அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றம்.

மேலும் “இது போன்ற வழக்கை நான் இதற்கு முன்பு கண்டதே இல்லை. இது மிகவும் அசாதாரணமான மற்றும் மோசமான பாலியல் துஷ்பிரயோகம். வன்கொடுமைகளுக்கு அப்பாற்பட்ட கொடூரம்” என்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரிச்சர்டு எம்.பெர்மன் கூறினார்.
தீர்ப்பை அறிவித்த பிறகு தன் தவற்றை உணர்ந்து நீதிமன்றத்திலேயே கண்ணீர் வடித்துள்ளார் ஹேடன். அப்போது அவர், “நான் ஏற்படுத்திய அனைத்து வலிகளுக்கும் நான் மிகவும் வருந்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

புலனாய்வு அதிகாரிகள் கூறியது;

இதுகுறித்து புலனாய்வு அதிகாரிகள் கூறுகையில், ‘கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான பெண் நோயாளிகளிடம் பாலியல் அத்துமீறல்களை ராபர்ட் ஹேடன் செய்துள்ளார். பலரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

குறைந்தது 245 பெண்கள் தாங்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக புகார் அளித்துள்ளனர். அவர்களில் சிலர் மட்டுமே நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர். அதையடுத்து ராபர்ட் ஹேடனுக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது’ என்றனர்.

Leave a Comment