ரிலீஸ்க்கு முன்பே பல கோடி வசூல்லான படம்! இதனால் பொன்னியன் செல்வன் அடிவாங்குமா?
கலைபுலி எஸ் தாணுவின் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் திரைப்படம் நானே வருவேன். இந்த படத்தில் பல நட்ச்சத்திரங்கள் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கான டீசர் அன்னமையில் தான் வெளிவந்தது.இது ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது.இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் யுவன்சங்கர் ராஜா இயக்கியுள்ளார்.அந்த பாடல்கள் அனைத்துமே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் நானே வருவேன் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ரூ 25 கோடிக்கு அமேசான் நிறுவனமும் ,சாட்டிலைட் உரிமையை ரூ 18 கோடிக்கும் சன் டிவி வாங்கியுள்ளது. 35 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் ரிலீஸ்க்கு முன்பே எட்டு கோடி லாபமாக வசூல் செய்துள்ளது.இதுவே இந்த படத்திற்கு மிகப்பெரிய வெற்றிக்கு முதல் படி எனவும் திரையுலக வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.
இந்த படமானது வரும் 29 ஆம்தேதி வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.அதற்கு அடுத்த நாள் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியன் செல்வன் திரைப்படம் வெளியாகின்றது.தனுஷ் மற்றும் செல்வராகவன் ,யுவன் ஆகிய கூட்டணியில் வெளியாகும் இந்த படத்தினால் பொன்னியன் செல்வன் படத்தின் வசூல் அடிவாங்குமா என திரையுலகினர் பேசி வருகின்றனர்.