இனிமேல் அவரை பற்றி நீங்கள் பேசக்கூடாது!!! உதய்நிதி ஸ்டாலின் அவர்களுக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்!!!
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதய்நிதி ஸ்டாலின் அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இனிமேல் எடப்பாடி பழனிசாமி அவர்களின் பெயரை கொடநாடு வழக்கில் இணைத்து பேசுவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கடந்த செப்டம்பர் 7ம் தேதி அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் “சனாதானம் என்பதற்கான அர்த்தத்தை அதிமுக கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அவருடைய வீட்டு புத்தக அலமாறியில் தேடிக் கொண்டிருக்கின்றேன் என்று கூறினார்.
கொடநாடு காலை மற்றும் கொள்ளை வழக்கில் ஆட்டு தாடியின் பின்னால் நீண்ட நாட்கள் ஒளிந்திருக்க முடியாது. அந்த ஆடு காணாமல் போகும் பொழுது ஆட்டு தாடியின் பின்னால் ஒளிந்திருக்கும் உங்களின் நிலைமை என்ன ஆகும் என்பதை நீங்கள் யோசித்து பார்க்க வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எதிராக உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் “அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தன். பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் அவதூறு பரப்பும் வகையிலும் அறிக்கை வெளியிட்டுள்ளார்” என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி அவர்கள் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் “தன்னை(எடப்பாடி பழனிசாமி) பற்றி பேசுவதற்கு உதய்நிதி ஸ்டாலின் அவர்களுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் மான நஷ்ட ஈடாக 1 கோடியே பத்து லட்சம் ரூபாயை உதயநிதி அவர்களிடம் இருந்து வாங்கி தர வேண்டும்” என்று கோரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா அவர்களின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது “ஐந்து ஆண்டுகளாக கொடநாடு காலை மற்றும் கொள்ளை வழக்கு நடைபெற்று வருகின்றது. இது வரை ஒரு முறை கூட விசாரணைக்காக சம்மன் அனுப்பி வைக்கவில்லை. அரசு எந்திரம் தி.மு.கி கட்சி வசம் உள்ளது. இதனால் விசாரணை நடத்தி இருக்கலாம்.
மேலும் திமுக கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் 2018ம் ஆண்டு ஊழல் புகார் அளித்தார். அவர் அளித்த ஊழல் புகாரில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிந்த பிறகு அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும் எடப்பாடி பழனிசாமி அவர்களின் நற்பெயர் மீது களங்கம் விளைவிக்கும் விதமாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டது. இதை 6 லட்சத்து 72 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். மேலும் தேர்தல் நேரத்தில் இது போல அவதூறு பரப்பி வருவதாகவும்” வாதம் நடந்தது.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதி மஞ்சுளா அவர்கள் அரசியல் தலைவர்களுக்கு ஆடையில் பரஸ்பரம் இருக்கின்றது. ஆனாலும் இந்த வழக்கில் உள்ள ஆதாரங்களை வைத்து பார்க்கும் பொழுது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை அவதூறானதாக உள்ளது. இந்த வழக்கிற்கு அனுமதி வழங்கினால் பெரிய இழப்பு ஏற்படும்.
அதனால் இழப்புகளை தவிர்க்கும் பொருட்டு இனிமேல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இதுபோன்ற அவதூறான அறிக்கைகள் வெளியிடக்கூடாது என்றும் இதே போலீஸ் அறிக்கைகள் வெளியிடுவதற்கு தடை விதிக்க முகாந்திரம் உள்ளது என்றும் நீதிபதி மஞ்சுளாஅவர்கள் கூறினார். இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி அவர்களின் பெயரை கொடநாடு காலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்பு படுத்தி பேசக்கூடாது என்று கூறி அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அவர்களுக்கு இடைக் தடை விதித்து நீதிபதி மஞ்சுளா அவர்கள் உத்தரவு பிறப்பித்தார்.