பொறியியல் பாடப்பிரிவுகள் மூடப்படுகிறது!! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!!
தமிழ் வழிக் கல்வியில் படித்த மாணவர்களுக்காக பொறியியலில் உள்ள சிவில் மற்றும் மெக்கானிக் ஆகிய பாடப்பிரிவுகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழியில் பயிற்றுவிக்கப் படுகிறது. இந்நிலையில் இதில் மாணவர்கள் சேர்க்கை குறைவான காரணத்தினால் இந்த பாடப்பிரிவுகளை தற்காலிகமாக மூடப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் இதை பற்றி பாமாக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாணவர்கள் சேர்க்கை குறைந்ததை காரணம் காட்டி 11 உறுப்பு கல்லூரிகளில் பொறியியல் பாடத்திட்டத்தை நிறுத்துவது அதிர்ச்சியாக இருக்கிறது, இதனால் மாணவர்களின் கல்வியும், ஆசிரியர்களின் வேலை வாய்ப்பும் பாதிக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
மேலும் சிவில் மற்றும் மெக்கானிக் தமிழ் வழி பாடப்பிரிவுகளை நிறுத்தி விட்டு ரோபோட்டிக்ஸ் ஆங்கில வழி பாடபிரிவை இணைக்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதன்படி இந்த பாடபிரிவுகளில் பணியாற்றிய பேராசிரியர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் மற்ற உறுப்பு கல்லூரிகள் இருக்கும் மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களுக்கு மாற்றப்படுவார்கள். இடைகால ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப் படுவார்கள் என தெரிகிறது.
மாணவர்கள் சேர்க்கை குறைத்ததற்கு ஆசிரியர்களோ அல்லது மாணவர்களோ எந்த விதத்திலும் காரணமாக முடியாது. இந்த கல்லூரிகள் தொடங்கப்பட்டு பல வருடங்கள் ஆன நிலையில் இதன் கட்டமைப்பும், மாணவர்களின் வசதிகளை மேம்படுத்தாததும் கூட காரணமாக இருக்கலாம். மாணவர்களின் சேர்க்கையை காரணம் காட்டுவது ஏற்க முடியாததாக உள்ளது. இந்நிலையில் இந்த பாடப்பிரிவுகளை தற்காலிகமாக மூடப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து விட்டது.