100 நாள் வேலை திட்டம்: நாளைக்குள் வங்கி கணக்கு என்னுடன் இதை இணைக்காவிட்டால் சம்பளம் “கட்”!!
100 நாள் வேலை திட்டம் என்று சொல்லப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் கடந்த 2005 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது.இத்திட்டத்தின் படி பணியாளர்களுக்கு ஒரு ஆண்டில் 100 நாட்கள் என்ற அடிப்படையில் கட்டாயம் வேலை வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் கிராமங்களின் ஏரி,குளங்கள் தூர்வாருதல்,நீர் வழித்தடங்களை சீரமைப்பது, புதிய பண்ணைக் குட்டைகளை ஏற்படுத்துவது,மரக் கன்றுகள் நடுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.இத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 5 கோடியே 97 லட்சம் குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளது.இதன் மூலம் 80% கிராமப்புற பெண்களின் வாழ்வாதரம் மேம்பட்டு இருக்கிறது.தற்பொழுது 100 நாள் வேலை திட்டத்தில் பணியாளர்களுக்கு கொடுக்கபட வேண்டிய ஊதியம் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படுவதால் பணியர்களுக்கு உரிய தொகை கிடைத்து வருகிறது.இதற்காக வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு அதனடிப்படையில் சம்பளத் தொகை செலுத்தப்பட்டு வருகிறது.
வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என்ற இந்த அறிவிப்பை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் தேதி அறிவித்தது.அதன்படி பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முதல் 100 நாள் வேலை திட்ட பயனாளிகள் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் இல்லாவிட்டால் சம்பளம் நிறுத்தப்படும் என்று தெரிவித்தது. இதையடுத்து மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஆதார் இணைப்புக்கான காலக்கெடுவை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் நீட்டித்தது.
இந்நிலையில் நாளையுடன் இந்த காலக்கெடு முடிய இருப்பதால் இதுவரை வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்காத 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் நாளைக்குள் இணைத்துவிட வேண்டும்.இல்லையென்றால் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்று மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.