மத்திய அரசின் இசிஐஎல் நிறுவனத்தில் எக்ஸாம் இன்றி வேலை!! ரூ.55 ஆயிரம் வரை சம்பளம்!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!
மத்திய அரசின் அணு ஆய்வு துறையின் கட்டுப்பாட்டில் இசிஐஎல் என அழைக்கப்படும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் 3 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ப்ராஜெக்ட் என்ஜினியர்,டெக்னிக்கல் ஆபிசர் மற்றும் உதவி ப்ராஜெக்ட் என்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதற்கு தகுதியானவர்கள் www.ecil.co.in இணையதளம் மூலம் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து பூர்த்தியிட்டு உரிய சான்றிதழ்களுடன் நேர்க்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் இந்தியா முழுவதும் பணியமர்த்தப்பட உள்ளனர்.
பணியிடம்: இந்தியா முழுவதும்
தகுதி: பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிஇ,பிடெக் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் என்ஜினியர்,எலக்ட்ரானிக்ஸ் டெலிகம்யூனிகேசன் என்ஜினியர்,எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியர்,மெக்கானிக்கல்,கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: ப்ராஜெக்ட் என்ஜினியர் பணிக்கு 33 வயதுக்குள்ளும்,டெக்னிக்கல் ஆபிசர் பணிக்கு 30 வயதுக்குள்ளும்,உதவி ப்ராஜெக்ட் என்ஜினியர் பணக்கு 25 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
மேலும் எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும்,ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரையும் தளர்வு வழங்கப்பட உள்ளது.
மாதசம்பளம்: ப்ராஜெக்ட் என்ஜினியர் பணிக்கு மாதம் ரூ.45 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். டெக்னிக்கல் ஆபிசர் பணிக்கு மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.உதவி ப்ராஜெக்ட் என்ஜினியர் பணிக்கு மாதம் ரூ.24,500 மாதசம்பளமாக வழங்கப்படும்.
பணி : இது ஒரு தற்காலிக பணியாகும்.இந்நிறுவனத்தில் அதிகபட்சம் 4 ஆண்டுகள் வரை வேலை பார்க்க முடியும்.
நேர்காணல் நடைபெறும் நாள் & நேரம்: செப்டம்பர் 1,காலை 11.30 மணி.
முகவரி : சென்னை(தெற்கு மண்டலம்) ECIL, Economist House, Post-Box No.3148, S-15, Industrial Estate, Guindy, chennai 600 032 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.
நேர்காணல் நடைபெறும் நாள் மற்றும் நேரம்: செப்டம்பர் 4,காலை 11.30 மணி.
முகவரி:
1.மும்பை (மேற்கு மண்டலம்) ECIL, 1207, Veer Savarkar Marg, Dadar (Prbhadevi), Mumbai – 400 028.
2.டெல்லி (வடக்கு மண்டலம்) ECIL, D-15, DDA Local Shopping Complex, A-Block, Ring Road, Naraina, New Delhi – 110028.
3.கொல்கத்தா (கிழக்கு மண்டலம்) ECIL, Apeejay House, 4th floor, 15-Park Street, Kolkata – 700016.
4.ஹைதரபாத் தலைமை அலுவலகம் CLDC, Nalanda Complex, TIFR Road, Electronics Corporation of India Limited, ECIL Post, Hyderabad-62 என்ற முகவரியிலும்.
5.விசாகப்பட்டினம் மண்டலம் ECIL, 47-09-28, Mukund Suvasa Apartments, 3 rd Lane, Dwaraka Nagar, Visakhapatnam-530016.
6.பெங்களூர் (தெற்கு மண்டலம்) ECIL, 1/1, 2nd floor, LIC Building, Sampige Road, Malleswaram, Bengaluru – 560 003.
உள்ளிட்ட இடங்களில் நேர்காணல் நடைபெற இருக்கிறது.