தமிழ் சினிமாவுக்கு வேறு மொழிகளில் இருந்து நடிகைகள் வாய்ப்புக்காக வந்த வண்ணமே உள்ளனர். அந்த வகையில் மலையாளத்திலிருந்து வந்தவர் தான் மஞ்சிமா மோகன். கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் சிம்பு நடிப்பில் உருவான “அச்சம் என்பது மடமையடா” என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு இவர் அறிமுகமானார்.
இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு ஆரம்பத்தில் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து கடந்த 2015 ஆம் ஆண்டு நிவின்பாலி நடிப்பில் உருவான “ஒரு வடக்கன் செல்பி” எனும் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக அறிமுகமானார்.
தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வந்துள்ளார். இந்நிலையில் நடிகை மஞ்சிமா மோகனுக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் அவ்வளவாக கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கு அவருடைய உடல் எடை கூடி அவர் பார்ப்பதற்கு ஆன்ட்டி போல மாறியது தான் காரணம் என அவரது ரசிகர்கள் சமீபத்தில் பதிவிட்ட சில புகைப்படங்களுக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு அவர் இடையில் நடந்த ஒரு ஆக்சிடெண்ட் காரணமாக அதற்கான சிகிச்சையில் ஈடுபட வேண்டியிருந்ததால் உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்த முடியாமல் போனதாக விளக்கம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் மீண்டும் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். எது எப்படி இருந்தாலும் மஞ்சிமா மோகன் நடிப்பில் அடுத்தடுத்து துக்ளக் தர்பார், களத்தில் சந்திப்போம் என அடுத்தடுத்த படங்கள் தமிழில் வெளியாகவுள்ளன.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக படபிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் தன்னுடைய ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரடியாக உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது அவருடைய ரசிகர் ஒருவர் மஞ்சிமா மோகனிடம் அவருக்கு பிடித்த கவர்ச்சி புகைப்படத்தை அனுப்பு சொல்லி கேட்டுள்ளார். அதற்கு கொஞ்சமும் தாமதிக்காத நடிகை மஞ்சிமா மோகன் தன்னுடைய குழந்தை வயது புகைப்படத்தை அனுப்பி அந்த ரசிகருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.