ஒரு கிலோ தக்காளி 1 ரூபாய் தான்! அதிரடியாக விற்பனை ஆகும் தக்காளிகள்!!
நாடு முழுவதும் ஒரு கிலோ தக்காளி 100 முதல் 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் நிலையில் தமிழ்நாட்டில் ஒரு பகுதியில் ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் தக்காளியின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இன்றைய தினம் வரை தக்காளி தமிழ்நாட்டில் ஒரு கிலோ 100 ரூபாய் முதல் 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதே நிலைமைதான் மற்ற மாநிலங்களிலும் நிலவுகின்றது.
மும்பை, கொல்கத்தா, டெல்லி போன்ற முக்கிய நகரங்களிலும் தக்காளியின் விலை 120 ரூபாயில் இருந்து 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. வெயில், மழை, விளைச்சல் இல்லை, உற்பத்தி பாதிப்பு, போன்ற பல காரணங்கள் தக்காளியின் விலையேற்றத்துக்கு சொல்லப்படுகின்றது. இருந்தாலும் தக்காளியின் விலை சிறிது சிறிதாக உயர்ந்து கொண்டு இருக்கின்றது. ஒரு காலத்தில் தக்காளியின் விளைச்சல் அதிகமாக இருக்கின்றது என்று லாரி லாரியாக கீழே கொட்டிய தக்காளிகள் சில தினங்களாக மக்கள் மத்தியில் தங்கம் போல பார்க்கப்படுகின்றது.
என்னதான் தக்காளி கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்பட்டாலும் மக்கள் அதை வாங்கி பயன்படுத்தி தான் ஆக வேண்டும். தக்காளி இல்லாமல் எந்த ஒரு உணவும் இல்லை. இந்த தக்காளி நாடு முழுவதும் 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படும் நிலையில் தமிழகத்தில் எரு கிலோ தக்காளி ஒரு ரூப்ய்க்கு விற்கப்பட்டுள்ளது.
அந்த ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்தவர் அதிமுக கட்சியை சேர்ந்தவர் ஆவார். அதிமுக கட்சியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் மக்களுக்கு ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய்க்கு வழங்கியுள்ளார்.
சென்னையை சேர்ந்த அதிமுக கட்சி நிர்வாகி ராஜேஸ் அவர்கள் ஒரு டன் தக்காளியை விலை கொடுத்து வாங்கியுள்ளார். பின்னர் இந்த ஒரு டன் தக்காளியை ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய் என்று தண்டையார் பேட்டையில் வசிக்கும் ஆயிரம் குடும்பங்களுக்கு விற்பனை செய்துள்ளார்.
இது பற்றி அதிமுக நிர்வாகி ராஜேஷ் அவர்கள் “நாடு முழுவதும் தக்காளியின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழகத்தில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் முதல் 160 ரூபாய் வரை விற்க்கப்படுகின்றது. இதைகருத்தில் கொண்டு அண்ணன் எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் அறிவுறுத்தலின் படி ஒரு டன் தக்காளியை வாங்கி அதை ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய் என்று விற்பனை செய்தேன்” என்று கூறினார்.