8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் தகவல்!!
கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்று(டிசம்பர்1) தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக இராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதாவது வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதி மற்றும் அந்தமான் தெற்கு பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று(டிசம்பர்1) காலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று நாளை(டிசம்பர்2) காலை மீண்டும் வலுபெற்று புயலாக மாறவுள்ளது. மேலும் இந்த புயல் டிசம்பர் 4ம் தேதி அதிகாலை சென்னை மற்றும் ஆந்திராவின் தெற்கு கடல் பகுதியின் கரையோரம் நெருங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்று(டிசம்பர்1) இராமநாதபுரம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய எட்டு மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்றும் புதுச்சேரி மாநிலத்தில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் நாளை(டிசம்பர்2) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், சிவகங்கை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் புதுச்சேரியிலும் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் தகவல் வெளியாகி இருக்கின்றது.
அதே போல டிசம்பர் 3ம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கடலூர், நாகை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய தமிழக மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்யும் என்று தகவல் கிடைத்துள்ளது. அதே போல டிசம்பர் 4ம் தேதி தமிழகத்தில் திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.