Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/livetamilnews.com/public_html/wp-includes/functions.php on line 6131

அறியாத வயதில் செய்த தவறு! இணையத்தில் வெளியான அந்த வீடியோவால் நடிகை புலம்பல்

சில வருடங்களுக்கு முன்னர் கேரளா மாநிலத்தை சேர்ந்த சோனா ஆபிரகாம் என்பவர் ‘ஃபார் சேல்’ என்ற மலையாள திரைப்படத்தில் வரும் ஒரு பலாத்கார சீனில் நடித்திருந்தார். ஆனால் அந்தக் காட்சி எடுக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட திரைப்படங்களில் வெளிவராத சில காட்சிகள் ஆபாச இணையதளங்களில் அந்த திரைப்படம் ரிலீஸ் ஆன சில மாதங்களிலேயே வெளியானது.

இந்நிலையில் இது குறித்து அந்த காட்சியில் நடித்த சோனா தனது பேஸ்புக் பக்கத்தில் வருத்ததுடன் பதிவிட்டுள்ளார்.

இந்த திரைப்படத்தில் இது மாதிரியான காட்சியில் நடித்தது பற்றி நடிகை சோனா கூறியதாவது, ‘அந்த படத்தில் நடிக்கும் போது எனக்கு 14 வயசு தான் இருக்கும். 150 க்கும் மேற்பட்ட நபர்கள் முன்னிலையில் அந்த சீன்ல நடிக்க முடியாது என டைரக்டர் சதீஷ் அனந்தபுரியிடம் மறுப்பு தெரிவித்தேன்.  ஆனால் அவர் என்னை இந்த விவகாரத்தில் சமாதானப்படுத்தி தான் அந்த காட்சியில் நடிக்க வைத்தார்.

இதனையடுத்து இந்தப் படத்தின் ஷூட்டிங்கை முடித்த பின்னர் அவர் பள்ளிக்கு படிக்க சென்று விட்டேன் எனவும். அவர் பிளஸ் டூ படிக்கும்போது அந்த படத்தில் வெளிவராத சில பலாத்காரக் காட்சிகள் ஆபாச இணையதளங்களில் வெளியானதால் அவரது குடும்பத்தினர் மற்றும் சொந்தக்காரர்கள் என அனைவருமே அவரை ஒரு மாதிரியாக பார்க்க தொடங்கி விட்டனர் என்றும் சோனா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சோனா இந்த பலாத்கார சீன் ஆபாச இணையதளங்களில் வெளியானது பற்றி கேரளா முதல்வர், டிஜிபி சைபர் கிரைம் போலீஸார் உள்ளிட்ட பலரிடம் புகார் தெரிவித்தும் ஆபாச இணைய தளத்தில் உள்ள அந்த வீடியோ இன்னும் நீக்கப்படாமல் இருப்பதால் தற்கொலைக்கு கூட முயன்றதாக சோனா தெரிவித்துள்ளார்.

பிரச்சனை இவ்வாறு சென்று கொண்டிருக்க தற்போது அவருக்கு ஆதரவாக பெண்கள் அமைப்பினர் அனைவரும் இந்த விஷயத்தில் குரல் கொடுக்க தொடங்கியுள்ளார்கள். மலையாள திரையுலக சங்கமான அம்மா- வில் தற்போது இந்த விஷயம் பூதாகரமாக கிளம்பியுள்ளது.

மேலும் இதைப் பற்றி காவல்துறையினர் தரப்பில் கூறியதாவது டைரக்டர் சதீஷ் அனந்தபுரிக்கு தெரியாமல் இந்த காட்சிகள் வெப்சைட்டில் வெளிவந்திருக்க முடியாது என்று சந்தேகத்துடன் குறிப்பிட்டிருக்கின்றனர். மேலும் சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் சோனாவின் வீடியோவை நீக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே  சோனாவை பற்றியும்,இந்த சம்பவம் குறித்தும் அதிர்ச்சியூட்டும் மற்றொரு தகவலும் கிடைத்துள்ளது. அதாவது சோனாவின் பெற்றோர்களுடைய முழு ஒப்புதலை பெற்று தான் சோனா அந்த மாதிரி காட்சியில்  நடித்தார் என்ற அதிர்ச்சியான தகவல் கிடைத்துள்ளது.

மேலும் எல்லாவற்றையும் மறைத்து விட்டு சோனா தற்போது வந்து புகார் அளித்துள்ளது ஏன் என்றும் கேரளா காவல் துறையினர் சோனாவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

sona-1

sona

Leave a Comment