இந்தியாவே திரும்பி பார்க்கும் அசத்தல் திட்டம்! கலக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தில் நீரிழிவு நோய்,உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்சனைகள் காரணமாக வயதானவர்கள் மணிக்கணக்கில் அரசு மருத்துவமனைகளில் காத்திருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் அவர்களுக்கெல்லாம் வரப்பிரசாதமாக அமையும் வகையில் அவர்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவம் பார்க்கும் வகையில் “மக்களை தேடி மருத்துவம்” என்ற அற்புதமான திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்துள்ளார்.
அரசின் மருத்துவ சேவைகளை பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கும் இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று கிருஷ்ணகிரியில் உள்ள சாமனப்பள்ளி என்ற கிராமத்தில் தொடங்கி வகித்துள்ளார்.இதுகுறித்து பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியுள்ளதாவது.
தொற்று அல்லாத நோய்களை கட்டுப்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்றும் இந்த திட்டமானது சுகாதார ஆய்வாளர்கள், கிராமப்புற செவிலியர் மற்றும் பெண் சுகாதார தன்னார்வலர்கள் உள்ளிட்டவர்கள் மூலம் செயல்படுத்தப்படும் என்றும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உயர் ரத்த அழுத்தம், காசநோய், பல வகை புற்றுநோய்கள், நீரிழிவு மற்றும் சிறுநீரக பிரச்னைகள் உள்ளிட்ட பிரச்சனையுள்ளவர்கள் இத்திட்டத்தின் கீழ் பலன் பெறலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டமானது முதல் கட்டமாக நகரம் மற்றும் கிராமப்பகுதிகளை சேர்ந்த 20 லட்சம் பேர் பயனடையும் வகையில் தொடங்கப்படும் என்றும், மேலும் இந்த திட்டம், படிப்படியாக 1 கோடி பேரை சென்றடையும் வகையில் விரிவாக்கப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 257 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று கிருஷ்ணகிரியில் உள்ள சாமனப்பள்ளி என்ற கிராமத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்து தமிழக முதல்வர் பேசியதாவது.
கொரோனா காலத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். மருத்துவத்தை தேடி மக்கள் செல்லும் சூழலை மாற்ற புதிய திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவிற்கே முன்னாடியாக “மக்களை தேடி மருத்துவம்” என்ற இந்த திட்டத்தை தொடங்கி உள்ளோம்..
இந்த திட்டத்தின் மூலம் டயாலிசிஸ் சிகிச்சையும் அளிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 40-க்கும் மேற்பட்ட நோய்களுக்கு சிகிச்சை வழங்கபடும். இந்த திட்டமானது படிப்படியாக மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த திட்டமானது மாநிலம் முழுவதும் நிச்சயம் விரிவுப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்