பிரபல தனியார் தொலைகாட்சியின் தொகுப்பாளர் பணிபுரிந்து வருபவர் விஜே அஞ்சனா. இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
சென்னையில் பிறந்து வளர்ந்தவரான VJ அஞ்சனா, பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளையும் அங்கேயே முடித்தார். 2008 ஆம் ஆண்டில் அஞ்சனாவுக்கு “மிஸ் சின்னத்திரை” விருது வழங்கப்பட்டது.
இந்த விருதானது தமிழ் தொலைக்காட்சியின் மிகவும் திறமையான மற்றும் நேர்த்தியான நட்சத்திரங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
இவருக்கு சினிமா வாய்ப்புகள் நிறைய வந்த போதிலும், நடிப்பின் மீது ஆர்வமில்லை என ஸ்ட்ரிக்டாக தொடர்ந்து அதையெல்லாம் தவிர்த்து விட்டார் அஞ்சனா. பின்னர் இவர் திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பிறகு தற்போது மீண்டும் தொலைக்காட்சி நிகழ்சிகளில் தொகுப்பாளினி பணியை தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் இவர் work out முடித்த பிறகு எடுத்த சில ஹாட்டான புகைப்படங்களை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.