ஆந்திராவில் நடந்த சோகம்! 2 மகள்களை கொன்று தந்தையும் தற்கொலை!!!
ஆந்திர மாநிலத்தில் கடன் தொல்லையால் தனது 2 மகள்களை ஏரியில் தள்ளி கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட தந்தை.
ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சத்தியேந்திர குமார் மற்றும் சுவாதி தம்பதியர். இவர்களுக்கு ரிஷிதா , சித்விகா என 2 மகள்கள் உள்ளனர் . சத்தியேந்திர குமார் G. S. T. அலுவலகத்தில் அக்கவுண்டராக பணிபுரிந்து வருகிறார் . இவருக்கு கடன் தொல்லை அதிகமாக உள்ளதால், அவர் வாங்கும் சம்பளம் முழுவதும் வட்டிகட்டி வந்துள்ளார். இந்த காரணங்களால் குடும்பத்தை சரிவர கவனிக்க முடியாமல் போனது . இந்நிலையில் சனிக்கிழமை உறவினர் வீட்டில் நடந்த சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்ள சுவாதி மட்டும் சென்றுள்ளார். நிகழ்ச்சி முடிந்து நேற்று காலை சுவாதி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. தனது கணவரின் செல்போனை தொடர்பு கொண்ட போது அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த சுவாதி இது குறித்து ராஜ மகேந்திரவரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர், இதன் மூலம் அங்குள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சத்தியேந்திர குமார் மகள்களுடன் கடையில் ஐஸ்கிரீம் சாப்பிட்டு விட்டு சென்றது தெரிய வந்தது.
அங்குள்ள ஏரிக்கரையின் மேல் சத்தியேந்திர குமார் மற்றும் ரிஷிதா, சித்விகா ஆகியோர் காலணிகள் இருந்தன இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர், தீயணைப்பு துறை வரவழைக்கப்பட்டு அவர்களை தேடும் பணியில் இறங்கினர். அப்போது தந்தை, 2 மகள்கள் உடல்கள் பிணமாக மீட்கப்பட்டன. கடன் தொல்லையால் தான் குமார் தற்கொலை செய்தாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.